அந்தியூர் அண்ணாமடுவு பகுதிகளில் 5 கடைகளில் திருட்டு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

அந்தியூர் அண்ணாமடுவு பகுதிகளில் 5 கடைகளில் திருட்டு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

Update: 2023-08-22 21:26 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முகமுடி அணிந்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அங்குள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றனர். மர்மநபர்கள் 2 பேரின் உருவம் அங்குள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து அந்தியூர் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் திருடர்கள் விட்டு சென்ற சில தடயங்கள் ைகப்பற்றப்பட்டது. அதை வைத்தும், அப்பகுதியில் உள்ள மேட்டூர் ரோடு, பவானி ரோடு, அந்தியூர் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்