சிமெண்ட் கடை பூட்டை உடைத்து திருட்டு

மாதர்பாக்கம் அருகே சிமெண்ட் கடை பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-11-26 09:42 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே சத்யவேடு சாலையில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 48) என்பவருக்கு சொந்தமான சிமென்ட் வோர்க்ஸ் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்த குடோன் அறையின் பூட்டை உடைத்து உள்ளை புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த வெல்டிங் எந்திரம், கட்டிங் எந்திரம், தண்ணீர் மோட்டார் மற்றும் இரும்பு பைப்புகளை திருடி சென்றனர். இது குறித்து முகமது இப்ராகிம் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்