சேலையூர் அருகே தலைமை செயலக ஊழியர் வீட்டில் திருட்டு
சேலையூர் அருகே தலைமை செயலக ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் தங்க நகைகளை திருடி சென்றனர்.
சென்னையை அடுத்த சேலையூர் அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருடைய மனைவி தங்கம். இவர், தலைமை செயலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு தரைதளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மாடியில் உள்ள வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது மர்மநபர்கள் தரை தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.