முத்தாலம்மன் கோவிலில் திருட்டு

ஆரணி அருகே முத்தாலம்மன் கோவிலில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர்.

Update: 2022-11-05 17:21 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமம் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அப்பகுதியில் லட்சுமி நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் சாலையோரம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று அதிகாலையில் கோவிலை திறக்க பூசாரி வந்த போது, பூட்டுகள் உடைக்கப்பட்டு, உண்டியல் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதைத் தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, வெளிப்பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் ஒரு கொள்ளையனும் மற்றும் கோவிலுக்குள் 2 கொள்ளையர்கள் புகுந்து கடப்பாரையால் உண்டியலை உடைத்து திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த கோவிலில் இதுவரை 5 முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்