வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் திருட்டு

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-01 19:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 47). இவர் தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாா். மறுநாள் கடையை திறந்த போது, கடையில் இருந்த கல்லா பெட்டியை காணவில்லை. இதில் ரூ.55 ஆயிரம், 1 செல்போன் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்