மளிகை கடையில் திருட்டு
எலச்சிபாளையம் அருகே மளிகை கடையில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
எலச்சிபாளையம்
எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதையடுத்து காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சரவணன் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 350 திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.