பர்னிச்சர் கடையில் திருட்டு

பாபநாசத்தில் பர்னிச்சர் கடையில் திருட்டு போனது..;

Update: 2023-09-26 19:54 GMT

பாபநாசம்:

பாபநாசம் அருகே எத்திராஜ்நகர் தெருவில் வசித்து வருபவர் பாரதிராஜா (வயது23). இவர் பாபநாசம் ெரயில்வே சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார் இவர் கடையின் உள்ளே பொருட்களை அடுக்கி கொண்டிருந்தபோது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த 10 பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா, பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நாற்காலிகளை திருடி சென்ற மர்ம நபர்கள், அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புவது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்