கார் சர்வீஸ் சென்டரில் திருட்டு

பண்ருட்டியில் கார் சர்வீஸ் சென்டரில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-11 18:42 GMT

பண்ருட்டி

பண்ருட்டி சென்னை சாலையில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருபவர் ரவிபாரதி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு சர்வீஸ் சென்டரை பூட்டி விட்டு அருகே உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் நேற்று காலை சர்வீஸ் சென்டரை திறக்க வந்தபோது சர்வீஸ் சென்டரின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு ரவிபாரதி அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.48 ஆயிரத்தை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்