பவானிசாகர்
பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 46). பூ வியாபாரியான இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டு கடைக்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது அவரது கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. அவரது மோட்டார்சைக்கிளை மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
உடனே இது குறித்து வெங்கட்ராமன் காவல்துறையின் இணையதளத்தில் ஆன்லைனில் புகார் பதிவு செய்துள்ளார். அதன்பேரில் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.