வீடு புகுந்து 21 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

வீடு புகுந்து 21 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது

Update: 2023-06-03 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி நவரத்தின நகர் வைடூரியம் வீதியில் வசித்து வருபவர் காதர் பாத்திமா (வயது 43). இவரது கணவர் சாதிக் பாட்ஷா துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாத்திமா தனது தாயாரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு பார்த்திபனூர் சென்றுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது. உள் கதவுகள், அறைகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன. பின்னர் வீட்டில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போனது.. இது குறித்து பாத்திமா அளித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பார்வையிட்டு மேல் விசாரணை நடத்திவருகிறார். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிபடை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்