ஈரோட்டில் துணிகரம்; பிரிண்டிங் அலுவலகத்தில்ரூ.2¼ லட்சம் திருட்டு- மர்ம நபருக்கு வலைவீச்சு

ஈரோட்டில் பிரிண்டிங் அலுவலகத்தில் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-16 22:22 GMT

ஈரோட்டில் பிரிண்டிங் அலுவலகத்தில் ரூ.2¼ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரிண்டிங் நிறுவனம்

ஈரோடு ஈஸ்வரன் கோவில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது 70). இவருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவனம் ஈரோடு பஸ் நிறுத்தம் அருகே நாச்சியப்பா வீதியில் இயங்கி வருகிறது. இங்கு பிளக்ஸ் பேனர்கள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. அதன் அருகிலேயே அதனுடைய அலுவலகம் உள்ளது.

நேற்று முன்தினம் புஷ்பநாதன் இரவு 10 மணி அளவில் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் அலுவலகத்தை திறப்பதற்காக ஊழியர் ஒருவர் வந்தார். அப்போது அலுவலகத்தின் பூட்டு இரும்பு கம்பியால் நெம்பப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்தார். உடனே அவர் இதுபற்றி உரிமையாளர் புஷ்பநாதனுக்கு தகவல் கொடுத்தார்.

ேமாப்பநாய்

இதை கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு விரைந்து வந்து, உள்ளே ெசன்று பார்த்தார். அங்கு பணம் வைக்கும் மேஜையின் டிராயர் திறந்து கிடந்து அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. மேலும் அலுவலகத்தின் மேல் அறையின் கதவும் நெம்பப்பட்டு அங்கு இருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் திருட்டு போனது.

இதுபற்றி புஷ்பநாதன் ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வீராவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்காமல் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுகொண்டது. கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாகி இருந்த தடயங்ளை பதிவுசெய்து கொண்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டனர். அதில் நேற்றுமுன்தினம் இரவு 2 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்துக்குள் நுழைவதும், பின்னர் பணத்தை திருடிவிட்டு வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கேமராவில் பதிவாகி இருந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரிண்டிங் நிறுவன அலுவலகத்தில் ரூ.2¼ லட்சம் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்