முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ மார்த்தாண்டம். இவர் அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளை அங்குள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதேபோல் வண்ணார் தெருவை சேர்ந்த மாதவன் தனது மோட்டார்சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவரும் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.