மகராஜகடை அருகேஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 19 பவுன் நகைகள் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-04-20 19:00 GMT

குருபரப்பள்ளி:

மகராஜகடை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணுவ வீரர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள மாட்டுண்ணியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 67). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த 16-ந் தேதி பெங்களூருவுக்கு தனது மனைவியுடன் மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

பின்னர் அவர்கள் 18-ந் தேதி வீடு திரும்பினர். அப்போது அவர்களுடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வலைவீச்சு

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சின்னதம்பி மகராஜகடை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்