தர்மபுரி:
தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). பூ வியாபாரி. இவர் பூக்கள் வாங்குவதற்காக தர்மபுரி பூ மார்க்கெட் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பூக்கள் வாங்கி கொண்டு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.