கோவில் திருவிழாவில்24 பவுன் நகைகள் திருட்டு
கோவில் திருவிழாவில் 24 பவுன் நகைகள் திருடப்பட்டது
காரைக்குடி
காரைக்குடியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவை காண பல்வேறு ஊர்களிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் காரைக்குடி வந்தனர். கோவில் திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி 8 பெண்களின் நகைகளை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். அபேஸ் செய்யப்பட்ட நகைகள் மொத்தம் 24 பவுன் ஆகும். இதுகுறித்து நகைகளை பறிகொடுத்த பெண்களின் புகாரின் பேரில் காரைக்குடி குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.