சேந்தமங்கலம்:
கொல்லிமலை கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலை பணிக்காக 150 இரும்பு தகடுகள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இரும்பு தகடுகள் திருடப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில் வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் திருடப்பட்ட இரும்பு தகடுகளில் 50 இரும்பு தகடுகள் நம் அருவி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.