கொல்லிமலை மலைப்பாதையில் சாலை பணிக்கு வைக்கப்பட்டிருந்த 150 இரும்பு தகடுகள் திருட்டு
சேந்தமங்கலம்:
கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்காக அங்கு இரும்பு தகடுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் அங்கிருந்த 150 இரும்பு தகடுகள் திருடப்பட்டன. இதுகுறித்து ஒப்பந்ததாரர் கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரும்பு தகடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.