பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு

காவேரிப்பட்டணம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-16 18:45 GMT

காவேரிப்பட்டணம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் போலீஸ் ஏட்டு

காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் வசிப்பவர் தனலட்சுமி (வயது 43). இவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார். கடந்த, 12-ந்தேதி இவர் வீட்டை பூ்டி விட்டு பணிக்கு சென்று விட்டார். குடும்பத்தினர் வெளியில் சென்று இருந்தனர். பணி முடிந்து தனலட்சுமி வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 6 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தனலட்சுமி காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்