ரூ.90 ஆயிரம் செம்பு கம்பி திருட்டு

பட்டுக்கோட்டை அருகே மின்வாரியத்துக்கு சொந்தமான ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள செம்பு கம்பியை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-12 19:00 GMT

பட்டுக்கோட்டை அருகே மின்வாரியத்துக்கு சொந்தமான ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள செம்பு கம்பியை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

செம்பு கம்பி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் குணா என்பவருக்கு சொந்தமான இடத்தில் தட்கல் மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 16 கிலோ வாட் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது அந்த மின்மாற்றியில் உள்ள செம்பு கம்பிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

ரூ.90 ஆயிரம்

திருட்டுப்போன காப்பர் காயில்களின் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும். இது பற்றி பட்டுக்கோட்டை மின்வாரிய புறநகர் கிழக்கு உதவி மின் பொறியாளர் பாரிநேசன் (வயது48) பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்வாரியத்திற்குச் சொந்தமான செம்பு கம்பிகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்