கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருப்புவனத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
திருப்புவனம்
திருப்புவனம் நகரில் பக்கீர்மொகம்மது (வயது 52) என்பவர் பேன்சி ஸ்டோர் கடை வைத்து உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சுவர் கடிகாரங்கள், டார்ச் லைட் மற்றும் பலவகை பொருட்களை திருடியதுடன் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து ஆசாமிகளை தேடி வருகிறார்.