கிறிஸ்தவ ஆலயத்தில் பணம் திருட்டு
கிறிஸ்தவ ஆலயத்தில் பணம் திருட்டு போனது.
தொண்டி,
தொண்டி அருகே வட்டானம் ஆர்.சி.நகரில் உள்ள கிறிஸ்தவ தேவலாயத்துக்கு சம்பவத்தன்று கையில் மெழுகுவர்த்தியுடன் இருவர் பிரார்த்தனை செய்ய வந்துள்ளனர். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்த உண்டியல் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து கிராம தலைவர் செபஸ்தியான் எஸ்.பி. பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.