வீடு புகுந்து 2 பவுன் நகைகள் திருட்டு

வீடு புகுந்து 2 பவுன் நகைகள் திருட்டு போனது.;

Update: 2022-12-14 19:49 GMT

தஞ்சையை அடுத்துள்ள தெற்கு மானோஜிபட்டி லட்சுமி சரஸ்வதி நகரை சேர்ந்தவர் குணசீலன் (வயது 42). சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 2 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்