மோட்டார் சைக்கிள் திருட்டு

ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.

Update: 2022-12-13 18:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகே உள்ள உளியாளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது25). இவர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, ஓசூர் -தளி சாலையில் உள்ள ஒரு டீக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, நண்பரின் வாகனத்தில் ஏறி அங்கிருந்து ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தபோது மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து விஜய் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்