கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருட்டு

சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருட்டு போனது.

Update: 2022-12-10 18:45 GMT

சூளகிரி

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சானியாபுரத்தை சேர்ந்தவர் பாபு பரமேஸ்வரன் (வயது47). வேலை நிமித்தமாக ஓசூர் வந்த அவர், சம்பவத்தன்று சூளகிரி அருகே சின்னார் பக்கமுள்ள ஒரு ஓட்டல் முன்பு, காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் காருக்கு வந்தபோது, கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்