ரூ.2 லட்சம் அலுமினிய கம்பி திருட்டு

ரூ.2 லட்சம் அலுமினிய கம்பி திருட்டு போயுள்ளது.

Update: 2022-12-08 19:00 GMT

நாகூர் அருகே ஒக்கூரில் தனியார் மின் உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திருபயத்தாங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (வயது50) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ந் தேதி அவர் இரவு நேர பணியில் இருந்தபோது பின்புறம் ஏதோ சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்்மேலும் அங்கு இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள அலுமினிய கம்பிகளை காணவில்லை. இதுகுறித்து நாகூர் போலீசில் ஜீவானந்தம் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நாகூர் - கங்களாஞ்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒக்கூர் அருகில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர் செல்லூர் பி.எஸ்.ஆர். சாலை பகுதியை சேர்ந்த செந்தில் மகன் செழியன் (வயது27) என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து மின் உற்பத்தி நிலையத்தில் அலுமினிய கம்பிகளை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள அலுமிய கம்பிகளை மீட்டனர். மேலும் செழியனை கைது செய்து, வழக்கில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்