தர்மபுரியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Update: 2022-12-07 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியை சேர்ந்தவர் ருஷ்தம் (வயது 37). லாரி உரிமையாளர். இவர் தனது மோட்டார் சைக்கிளை தர்மபுரியில் பென்னாகரம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதேபோல் தர்மபுரி காந்திநகரில் வீட்டின் முன்பு நிறுத்திருந்த எத்திராஜ் (46) என்பவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது. இதுதொடர்பாக ருஷ்தம், எத்திராஜ் ஆகியோர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்