ரூ.5 லட்சம் இரும்பு கம்பிகளை திருடி லாரியில் ஏற்றிச்சென்ற மர்ம நபர்கள்

பாபநாசத்தில், கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடி மர்ம நபர்கள் லாரியில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-22 19:00 GMT

பாபநாசத்தில், கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடி மர்ம நபர்கள் லாரியில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடையின் பூட்டு உடைப்பு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாலைத்துறையில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையை பாபநாசத்தை சேர்ந்த முகமது நிசார் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்த நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.5 லட்சம் இரும்பு கம்பிகள் திருட்டு

பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 டன்னுக்கு மேல் எடை உள்ள ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி லாரியில் ஏற்றிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து பாபநாசம் போலீஸ் நிலையத்திற்கு முகமது நிசார் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கடைக்கு வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உள்ளே இருந்த இரும்பு கம்பிகளை திருடி லாரியில் ஏற்றிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இந்த பதிவுகளை வைத்து இரும்பு கம்பிகளை திருடி லாரியில் ஏற்றிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்