சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்த கணினி, பிரிண்டர் மற்றும் செல்போன் ஆகியவைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 600 ஆகும். இதுகுறித்த அலுவலக கண்காணிப்பாளர் சரோஜா சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.