ஓசூர் அருகே ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் திருட்டு

Update: 2022-09-28 18:45 GMT

மத்திகிரி:

ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டிப்பள்ளி வி.ஜி.பி. லேஅவுட்டில் வசித்து வருபவர் அஜித். இவர் கேரளாவில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அஜித்திடம் இருந்த பணம் மற்றும் செல்போன், மடிக்கணினியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஜித் மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்