மத்தூர் அருகே மூதாட்டி வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு

மத்தூர் அருகே மூதாட்டி வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு

Update: 2022-09-17 16:26 GMT

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள குண்டேப்பள்ளியை சேர்ந்தவர் சாந்தம்மாள் (வயது 78). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள வீட்டில் வசிக்க கூடிய ராஜேஸ்வரி என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றார். இந்த நிலையில் சாந்தம்மாள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் 7 பவுன் நகைகள், ரூ.9 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

கதவு எதுவும் திறக்கப்படாத நிலையில் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து சாந்தம்மாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்