டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டுபோனது.
நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் கடந்த 13-ந் தேதி இரவு 10 மணிக்கு விற்பனையை முடித்து விட்டு பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 30 மதுபாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. ஆனால் கல்லா பெட்டியில் இருந்த பணம் திருட்டு போகவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.