ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருட்டு
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் திருடப்பட்டது.;
காரைக்குடி,
காரைக்குடி செக்காலை கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்றவர். இவரது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டது. இதனால் ராஜேந்திரன் காரைக்குடி அண்ணா சிலை அருகே உள்ள அரசு வங்கியில் உள்ள தனது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் எடுத்து தனது மோட்டார்சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். வழியில் ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்த பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.5 லட்சத்தை மர்ம நபர் ஒருவர் திருடிவிட்டு தப்பி ஓடினார்.இதுகுறித்து ராஜேந்திரன் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.