அரசு அதிகாரி வீட்டில் திருட்டு

அரசு அதிகாரி வீட்டில் திருட்டுபோனது.

Update: 2022-08-25 16:58 GMT

காரைக்குடி,

காரைக்குடி அடுத்த வைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் விவசாயம் செய்து வருவதோடு, கயிறு தொழிற்சாலையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்து ஜெயம். இவர் திருமயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர்களுடைய வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்