ஆவினங்குடி அருகே விவசாயி வீட்டில் டி.வி., பணம் திருட்டு
ஆவினங்குடி அருகே விவசாயி வீட்டில் டி.வி., பணம் திருடு போனது.
ராமநத்தம்,
ஆவினங்குடி அருகே உள்ள நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 50), விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்டனை தவிர மற்ற 2 பேரும் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்சாரம் இல்லாததால், நாராயணன் தனது குடும்பத்துடன் வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த டி.வி., செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரத்தை காணவில்லை. வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூரில் வேலை பார்த்து வரும் நாராயணனின் 2-வது மகன் ஹரிகிருஷ்ணனுக்கு வருகிற 9-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.