எருமப்பட்டியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
எருமப்பட்டியில் 2 வீடுகளில் நகை, பணம் திருடபட்டது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவருடைய மனைவி ரேவதி (35). இவர்கள் எருமப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பூக்கடை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை ரேவதி, பூக்கடையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 2 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
எருமப்பட்டி பழனிநகரை சேர்ந்தவர் அஜித் (25). தொழிலாளி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 2 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.