வீட்டு கதவை உடைத்து புகுந்து 20 கிலோ வெள்ளி ெகாள்ளை

தேவகோட்டை அருகே வீட்டு கதவை உடைத்து புகுந்து 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.;

Update: 2022-07-26 17:26 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே வீட்டு கதவை உடைத்து புகுந்து 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

கதவு திறந்து கிடந்தது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆறாவயல் சண்முகநாதபுரம் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் செட்டியார் (வயது 85). இவர் கோவையில் வசித்து வரும் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார். இவரது வீட்டில் தினமும் மாலையில் விளக்கு ஏற்றுவதற்காக பெண் ஒருவர் வருவது வழக்கம்.

அவர்  வழக்கம் போல வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிதம்பரம் செட்டியாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

20 கிலோ வெள்ளி

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த மர்ம நபர்கள் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன ெபாருட்களின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்