புதுச்சத்திரம் தனியார் ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது
புதுச்சத்திரம் தனியார் ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
சிதம்பரம்,
புதுச்சத்திரம் அடுத்த பெரிய குப்பத்தில் தனியார் ஆலை ஒன்று உள்ளது. இங்கு நேற்று காவலாளியான கடலூர் வண்ணார பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் பணியில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த 2 பேர் இரும்பு பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்த கண்ணன் சக ஊழியர்கள் உதவியுடன் அவர்களை பிடித்து புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் தியாகவல்லி பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 58), திருச்சோபுரம் சிவன் கோவில் பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் அருண்பாண்டியன் (20) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 70 கிலோ இரும்பு பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டி, மினிவேன், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.