ஹார்டுவேர்ஸ் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

Update: 2023-09-29 19:00 GMT

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சந்தூர் கிராமத்தில் எலக்ட்ரிக் ஹார்டுவேர்ஸ் கடையை நடத்தி வருபவர் கோவலன். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்,

பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.2 லட்சம், லேப்டாப், செல்போன், எலக்ட்ரிக் ஓயர்கள் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் போச்சம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹார்டுவேர் கடையின் மேற்கூரையை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்