தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை சாகர் லேஅவுட்டை சேர்ந்தவர் ஜாகீர் (வயது 39). கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். கடந்த 1-ந் தேதி ஜாகீரும், அவருடைய மனைவியும் ஓசூர் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்தபோது முன்புற கதவு திறக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவை திறந்து உள்ளே வைத்திருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஜாகீர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.