தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா கங்க தேவனப்பள்ளியை சேர்ந்தவர் மாதேவம்மா (வயது 65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் விவசாய பணிக்காக தென்னந்தோப்புக்கு சென்றார். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பையில் வைத்து விட்டு வேலை செய்தார். இதையடுத்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது பையை திருட்டு போனது. அதில் 3½ பவுன் நகைகள் இருந்தன. இதுகுறித்து மாதேவம்மா கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.