காரிமங்கலம்:
காரிமங்கலத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் ராமசாமி கோவில் அருகே பேக்கரி கடை மற்றும் டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை டீ மாஸ்டர் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கடை உரிமையாளர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற சண்முகம் கடையில் கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டு அதில் இருந்த ஹார்டுடிஸ்க் மற்றும் சில பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.