நரசிம்மர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

Update: 2023-09-25 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி மற்றும் நரசிம்ம பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவோண ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் தெப்பக்குளத்திற்கு பெருமாள் எழுந்தருளல், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, வருண ஜெபம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலையும், தெப்பக்குளத்தையும் பெருமாள் சப்பரத்தில் தீர்த்த வலம் வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்