இளையான்குடி அருகே ரூ.7 லட்சத்தில் நாடகமேடை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

இளையான்குடி அருகே ரூ.7 லட்சத்தில் நாடகமேடையை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-08-10 19:15 GMT

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் சீவலாதி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நாடக மேடை கலையரங்க திறப்பு விழா தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. முன்னதாக புதுக்கோட்டை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணியன், ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வ ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சீவலாதி ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாடக மேடை கலை அரங்கத்தை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். முன்னதாக தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர் தனசேகரன் வரவேற்றார். .கிராம ஊராட்சி செயலாளர் பாக்யராஜ் அனைவருக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தார். நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன். ஒன்றிய கழக செயலாளர்கள் ஆறு.செல்வராஜன், தமிழ்மாறன், விவசாய கூட்டுறவு சங்க செயலாளர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன், நீர்ப்பாசன கமிட்டி தலைவர் கருணாகரன், பழம்பொதி, கஸ்பார், போஸ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவிலை சுற்றி சாலை அமைக்க நிலங்கள் வழங்கியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் சீவலாதி ஊராட்சி மன்ற தலைவி பழனியம்மாள் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்