பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
சின்னசேலத்தில் பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சின்னசேலம்,
சின்னசேலத்தில் இருந்து நயினார்பாளையம் வழியாக வி.மாமாந்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கருந்தலாக்குறிச்சி வனப்பகுதியில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த சாமிதுரை (வயது 25) என்பவர் பஸ்சை வழிமறித்தார். பின்னர் அவர் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி அங்கு ரகளையில் ஈடுபட்டார். இது குறித்த தகவலி்ன் பேரில் கீழக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி சாமிதுரையை கைது செய்தனர்.