தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

Update: 2022-06-29 13:33 GMT

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 24). இவர் கடந்த 2019-ம் ஆண்டு வி.கே.புரம் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் அவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் வி.கே.புரம் போலீசார் ராமகிருஷ்ணனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்