தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மேலபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். தொழிலாளி. இவருடைய மனைவி மாணிக்கரசி (வயது 47). இவரை அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (23) என்பவர் வீடுபுகுந்து சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணிக்கரசி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வடசேரி போலீசார் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சந்தோஷ் தலைமறைவாகிவிட்டார்.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் சந்தோஷ் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சந்தோசை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். பின்னர் நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.