கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள ெரயில்வே நிலையம் ரோடு அருகில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த அரசம்பாளையம் பிரிவை சேர்ந்த குணசேகரன் (வயது 26) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 21 மது பாட்டில்களையும் 5 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.