பத்திரப்பதிவு செய்த வாலிபர் கைது

வடமதுரையில் போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து பத்திரப்பதிவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-08 19:00 GMT

திண்டுக்கல் அருகே உள்ள செங்குறிச்சி கம்பளியம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 31). இவர் போலி இறப்பு சான்றிதழ் கொடுத்து வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அவர் வடமதுரை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது உறவினரான சின்னக்காளை என்பவருக்கு போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து, அதன்மூலம் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வடமதுரை சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்