தியாகதுருகம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
தியாகதுருகம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து, நர்சிங் படிப்பு படித்தார். இந்த நிலயைில், இவரை தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (வயது 23) என்பவர், சித்தலூர் பெரியநாயகி கோவிலில் வைத்து, சிறுமிகழுத்தில் தாலி கட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாணவியை படிக்க வைக்காமல் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி மாணவி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.