சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது
ராமநாதபுரத்தில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி. 9-வது வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரிடம் ராமநாதபுரத்தை சேர்ந்த பூவலிங்கம் மகன் அரவிந்த் (19) என்பவர் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். அரவிந்த் மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம். இந்நிலையில் அரவிந்த் மேற்கண்ட சிறுமியிடம் அடிக்கடி காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினாராம். மேலும், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படவே அவர் சந்தேகமடைந்து அந்த பகுதியில் வசிக்கும் செவிலியரிடம் விவரம் கேட்டுள்ளார். அவர் சிறுமியை அழைத்து கொண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த சோதனையில் சிறுமி கர்ப்பிணியாக உள்ள அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சிறுமி கர்ப்பிணியாக சிகிச்சைக்கு வந்துள்ள தகவல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மூலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ஹெலன்ராணி ஆகியோர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மேற்கண்ட அரவிந்த் ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது. இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபர் அரவிந்த்தை கைது செய்தனர்.